Theme Check

மிரட்டும் கொரோனா.. ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு !! கடுமையாகும் கட்டுப்பாடுகள் !

மிரட்டும் கொரோனா.. ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு !! கடுமையாகும் கட்டுப்பாடுகள் !

மிரட்டும் கொரோனா.. ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு !! கடுமையாகும் கட்டுப்பாடுகள் !
X

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைநகர் டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் மிகவும் அதிளவில் தொற்றின் தீவிரம் உள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிப்பதோடு பாதிப்பும் குறைந்தபாடில்லை. தலைநகர் டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 4 வாரத்தை எட்டவுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து 4ஆவது நாளாக கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னதாக வரும் மே 15 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 4.03 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், 4,092 பேர் உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த முறை இன்னும் புதிதாக பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி மெட்ரோ ரயில் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 35% மாக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 23% ஆகக் குறைந்துள்ளது. ஆனால், மருத்துவ நிபுணர்கள் இதுவே அதிகம் என்கின்றனர். கொரோனா பரவல் சங்கிலியை முற்றிலுமாக உடைக்க வேண்டும். அதற்காகவே கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

newstm.in


Tags:
Next Story
Share it