Theme Check

மிரட்டும் கொரோனா.. நுரையீரலை காப்பாற்றும் சுவாசப் பயிற்சி: வீட்டிலேயே செய்வது எப்படி?

மிரட்டும் கொரோனா.. நுரையீரலை காப்பாற்றும் சுவாசப் பயிற்சி: வீட்டிலேயே செய்வது எப்படி?

மிரட்டும் கொரோனா.. நுரையீரலை காப்பாற்றும் சுவாசப் பயிற்சி: வீட்டிலேயே செய்வது எப்படி?
X

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு முதலில் பாதிப்பது நுறையீரல் தான். இதனால், நிறைய பேர் சுவாசப் பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள். குறிப்பாக கொமொர்பிடிட்டிஸ் உள்ளவர்கள் இதில் அடங்குவர். அதாவது ஒரு நோயாளிக்கு ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்கள் அல்லது மருத்துவ நிலைமைகளில் இருப்பது என்பதாகும்.

எனவே, கொரோனா மீட்சியின் போது, நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் ஒருவரின் உடற்பயிற்சி வழக்கத்தில் சுவாசப் பயிற்சிகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளும்படி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

corona breating

ஆரோக்கியமான நுரையீரல் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது வயதானவர்கள் மற்றும் வயதான நுரையீரல் உள்ளவர்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஃபரிதாபாத் ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்தின் கூடுதல் இயக்குநர் மற்றும் எச்.ஓ.டி ஆன டாக்டர் ரவி சேகர் ஜா கூறியுள்ளார்.

சிஎன்என் மூலம் வெளியான இது தொடர்பான அறிக்கையில் டாக்டர் மேத்யூ ஷ்மிட் கூறுகையில், கொரோனா அல்லது பிற நோய்களில் இருந்து மீண்டு வரும்போது நுரையீரலில் உள்ள சளியை அகற்ற எளிய மற்றும் பயனுள்ள சுவாசப் பயிற்சியை பின்பற்ற வேண்டும்.
அதில் ஒன்று தான் ரூல் ஆஃப் த்ரீஸ் (Rule of threes) என்ற சுவாசப் பயிற்சி ஆகும். இந்த சுவாசப் பயிற்சியின் போது மூன்று முறை இரும வேண்டும் மற்றும் இதை மூன்று முறை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.

breating

சரி, Rule of threes என்ற சுவாசப் பயிற்சி செய்வது எப்படி என பார்க்கலாம்..

  • முதலில், நுரையீரல் விரிவாக்கத்திற்கு ஈர்ப்பு விசையை அனுமதிக்க இந்த பயிற்சியை செய்யும் போது எழுந்து நிற்கவும்.
  • உங்கள் மூக்கு வழியாக ஒரு ஆழமான மூச்சை எடுத்து 5 - 10 விநாடிகள் தக்க வையுங்கள்
  • பின்னர் உதடுகளை சுருக்கி வாய் வழியாக சுவாசிக்கவும். இதையே மூன்று முறை செய்யவும்
  • மூன்றாவது முறை மூச்சை வெளிவிடும்போது மூன்று முறை வலிமையாக இரும வேண்டும்.
  • இந்த மொத்த மூச்சு பயிற்சியையும் மூன்று முறை செய்யவும்.

உங்கள் மூக்கின் வழியாக ஆழமாகவும் மெதுவாகவும் சுவாசிப்பதன் விளைவாக கீழ் விலா எலும்புக் கூண்டு விரிவடையும், இது வயிற்றை முன்னோக்கி நகர்த்தவும் அனுமதிக்கிறது. மேலும் இந்த பயிற்சி நுரையீரல் திறனை அதிகரிக்கவும், ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தவும் வழிவகுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


newstm.in

Next Story
Share it