Theme Check

மிரட்டும் கொரோனா.. கடும் கட்டுப்பாடுகளுடன் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல் !!

மிரட்டும் கொரோனா.. கடும் கட்டுப்பாடுகளுடன் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல் !!

மிரட்டும் கொரோனா.. கடும் கட்டுப்பாடுகளுடன் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல் !!
X

இந்தியாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை அதே வீரியத்தில் தொடர்ந்து பரவி வருகிறது.

எனினும், கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்திருந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது 15 நாள்களாக நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,982 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 47,288 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


டெல்லியில் இதுவரையில் 6,79,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 11,096 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகளின்படி, தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரவு நேரத்தில் பேருந்து, மெட்ரோ, ஆட்டோகள் செயல்படுவதற்கு தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு மற்றும் வார இறுதிநாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it