Theme Check

துப்பாக்கியை காட்டி மிரட்டல்.. பாஜக அமைச்சரின் மகனை புரட்டி எடுத்த கிராம மக்கள் !

துப்பாக்கியை காட்டி மிரட்டல்.. பாஜக அமைச்சரின் மகனை புரட்டி எடுத்த கிராம மக்கள் !

துப்பாக்கியை காட்டி மிரட்டல்.. பாஜக அமைச்சரின் மகனை புரட்டி எடுத்த கிராம மக்கள் !
X

குழந்தைகளை துப்பாக்கியால் சுட முயன்ற புகாரில் பாஜக அமைச்சரின் மகனை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், அம்மாநில பாஜகவின் மூத்த முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் நாராயண் பிரசாத் உள்ளார். அமைச்சர் நாராயண் பிரசாத்தின் மகன் பப்லு குமாரை கிராம மக்கள் சுற்றிவளைத்து தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bihar

அதாவது, அங்குள்ள ஹரடியா கோரி தோலா பகுதியில், அமைச்சருக்கு சொந்தமான மாங்காய் தோட்டத்தில் அப்பகுதி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த பப்லு சிறுவர்களை விரட்டும் நோக்கில் வானத்தை நோக்கி தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதனால் அலறியடித்துக் கொண்டு சிறுவர்கள் ஓடிய போது ஆறுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் சிறுவர்களை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

bihar

இதனை அறிந்து ஆவேசமடைந்த கிராம மக்கள் நேரில் சென்று தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது, பப்லு மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கிராம மக்கள் சூழ்ந்துகொண்டு அவர்களை தாக்கியுள்ளனர். மேலும் அவரிடமிருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டுள்ளனர். அவர் வந்திருந்த வாகனத்தையும் சூறையாடினர். பாஜக அமைச்சரின் மகன் தாக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.


newstm.in


Tags:
Next Story
Share it