பல மொழிகளில் யோகா கற்றுத்தர MYoga App அறிமுகம் ! சர்வதேச அளவில் ஊக்குவிக்க பிரதமர் நடவடிக்கை !
பல மொழிகளில் யோகா கற்றுத்தர MYoga App அறிமுகம் ! சர்வதேச அளவில் ஊக்குவிக்க பிரதமர் நடவடிக்கை !

சர்வதேச யோகா தினத்தையொட்டி 'ஒரு உலகம், ஒரே ஆரோக்கியம்' என்ற திட்டத்தை ஊக்குவிப்பதற்காக mYoga App-ஐ பிரதமர் நரேந்திர மோடி செயலியை அறிவித்தார்.
7ஆவது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் மத்திய அமைச்சர்கள் பலரும் இன்று யோகா நிகழ்வுகளில் பங்கேற்றனர். இதனிடையே, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் சிறப்புரையாற்றினார்.

இந்த உரையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. உலக நாடுகளின் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது என்றார். இதனால் உலக மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.. என்ற திருக்குறளையும் தமது உரையில் பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். அத்துடன் உலகின் பல்வேறு மொழிகளில் யோகா கற்றுத்தரும் வகையில் M-Yoga App என்ற மொபைல் செயலியை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார்.

உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து யோகா கற்பதற்கான இந்த செயலி உருவாக்கப்படும்; உலகின் பல நாட்டவரும் யோகாவை கற்கும் வகையில் பல்வேறு மொழிகளில் இந்த செயலியில் வீடியோக்கள் இடம்பெறும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த M-Yoga App பயன்பாடு தற்போது பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.
Addressing the #YogaDay programme. https://t.co/tHrldDlX5c
— Narendra Modi (@narendramodi) June 21, 2021
newstm.in

