'சரக்கு வேணும்..' போதையில் டாஸ்மாக் ஊழியரை தாக்கிய அதிமுக பிரமுகர்கள்!!
'சரக்கு வேணும்..' போதையில் டாஸ்மாக் ஊழியரை தாக்கிய அதிமுக பிரமுகர்கள்

கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே டாஸ்மாக் கடையுடன் இணைந்து பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான ரஞ்சித் அங்கு சென்றுள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த ரஞ்சித், மேலும் சரக்கு அடிக்க எண்ணி மதுக்கடைக்கு சென்றார். ஆனால் அரசு உத்தரவுப்படி 10 மணிக்கு டாஸ்மாக் மதுபான கடை மூடப்பட்டுள்ளது. எனினும் ரஞ்சித் மதுபானம் கேட்டு கடை ஊழியர்களை மிரட்டியுள்ளார்.

அப்போது அங்கிருந்த ஊழியர் சசிகுமார், நேரம் கடந்ததை சுட்டிக்காட்டி மதுபானம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து ரஞ்சித் மற்றும் அவருடன் வந்த சிலர் சசிகுமாரை தாக்கியுள்ளனர்.
அத்துடன் ரஞ்சித் மதுபான கடையையும் தாக்கியுள்ளார். இதில் தலையில் காயமடைந்த சசிகுமாரை மீட்ட ஊழியர்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை தேடி வருகின்றனர். தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
newstm.in


