IPL: சோகத்தில் சென்னை ரசிகர்கள்.. பிளே ஆப் வாய்ப்பு முடிந்துபோனது !!
IPL: சோகத்தில் சென்னை ரசிகர்கள்.. பிளே ஆப் வாய்ப்பு முடிந்துபோனது !!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் சிறப்பான பேட்டிங்கால் சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. பின்னர் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இணை பவர் பிளே முடியும்வரை நீடித்தது.
6 ஓவர்களில் 50 ரன்களை கடந்த போது ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக நடையை கட்டினார். அடுத்த சில நிமிடங்களில் ராபின் உத்தப்பா ஒரு ரன்னோடு அவுட் ஆக, அம்பதி ராயுடுவும் 10 ரன்களோடு இன்னிங்ஸை முடித்துக்கொள்ள சென்னை அணி தடுமாறியது.

முதல் விக்கெட்க்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், 75 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்கள் இழந்து தடுமாறியது. பின்னர் சென்னை அணிக்கு கான்வே மற்றும் மொயீன் அலி இணைந்து ரன்களை சேர்ந்ததனர். 15ஆவது ஓவரில் கான்வே 56 ரன்களுக்கும், 17வது ஓவரில் மொயீன் அலி 34 ரன்களுக்கும் அவுட் ஆக, தோனி உள்ளிட்ட பின்வரிசை வீரர்கள் சோபிக்க தவறினர். டுவைன் பிரிட்டோரியஸ் மட்டும் இரட்டை இலக்கத்தை தொட மற்ற பின்வரிசை வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னோடு வருவதும் போவதுமாக இருந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூரு தரப்பில் ஹர்சல் படேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டும், மேக்ஸ்வெல் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் சென்னை அணி மீண்டும் தோல்வியை தழுவியது. இதுவரை விளையாடிய பத்து போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றிபெறு புள்ளிகள் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இதனால் சென்னை அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்ததால் அந்த அணியின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
newstm.in

