Theme Check

ஐ.பி.எல். போட்டி! எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? தீவிர பயிற்சியில் தோனி!

ஐ.பி.எல். போட்டி! எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? தீவிர பயிற்சியில் தோனி!

ஐ.பி.எல். போட்டி! எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? தீவிர பயிற்சியில் தோனி!
X

2020ல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு பின் அமீரகத்தில் நடத்தப்பட்டது. நடப்பாண்டில் நடைபெற இருக்கும் 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9ம் தேதி நாளை தொடங்கி மே 30 வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற இருக்கிறது.இதில் பல அணிகள் பங்கேற்றாலும், அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய ஒரு முன்னோட்டம் இது தான்.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அதாவது 8 முறைகள் முண்ணனியில் இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.ஐபிஎல் கோப்பையை இதுவரை 3 முறை வென்றிருக்கிறது. வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் முதல்முறையாக 2020 சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சிக்குள்ளானது. முந்தைய அனைத்து தொடர்களிலும் சிறப்பாக விளையாடி குறைந்தது ‘ளே-ஆப்’ சுற்றை எட்டியிருந்த நிலையில் 2020 ஆட்டத்தில் சென்னை அணி மிக மோசமான அனுபவத்தை தந்தது. கொரோனா அச்சுறுத்தலால் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோர் கடைசி நேரத்தில் விலகியதும் ஒரு காரணமாக இருக்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இரண்டு வீரர்கள் உள்பட 13 உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு, சரியான தொடக்கம் கிடைக்காதது இவை ஒரு காரணமாக இருக்கலாம். அத்துடன் மிடில் வரிசையில் கேதர் ஜாதவின் மந்தமான பேட்டிங், கேப்டன் டோனியின் தடுமாற்றம் , ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ முழு உடல்தகுதியுடன் இல்லாதது இவை எல்லாம் சென்னை அணியின் வீழ்ச்சிக்கு ஒரு காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன. முதல் 11 ஆட்டங்களில் 8-ல் தோல்வியை சந்தித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. அதன் பிறகு கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் சென்னை அணி 7-வது இடத்தை (6 வெற்றி, 8 தோல்வி) பிடித்தது.இதனடிப்படையில் நடப்பாண்டுக்குரிய போட்டியில் சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன் ,ஹர்பஜன்சிங், முரளிவிஜய்,ஹேசில்வுட் உட்பட 6 வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் தனிப்பட்ட காரணத்துக்காக இந்த சீசனில் இருந்து பின்வாங்கி விட்டார்.மொயீன் அலி, கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா, ஹரி நிஷாந்த் ஆகியோர் அணியில் புதிதாக எடுக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா , அதிரடி ஆல்-ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம், மொயீன் அலி, உத்தப்பா ஆகிய புதிய வரவுகள் இவை எல்லாம் இந்த சீசனில் சென்னை அணியின் வலிமையை அதிகரித்துள்ளது.

பொதுவாக சென்னை அணியின் பலம் என்பது அனுபவ வீரர்கள் தான். மூத்த வீரர்கள் காயத்தில் சிக்கியதும், அவுட் ஆப் பார்மும் பாதிப்பு ஏற்படுத்தியது. இந்த ஆண்டு அனுபவமும், இளமையும் கலந்த அணியாக அதிரடியாக உருவாக்கப்பட்டு உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 10 ம்தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பெற்ற இடங்கள்
2008- 2-வது இடம்
2009- பிளே-ஆப் சுற்று
2010- சாம்பியன்
2011- சாம்பியன்
2012- 2வது இடம்
2013- 2-வது இடம்
2014- பிளே-ஆப் சுற்று
2015- 2-வது இடம்
2018- சாம்பியன்
2019- 2-வது இடம்
2020- லீக் சுற்று

சென்னை சூப்பர் கிங்ஸ்-ல் இடம் பெற்றுள்ள அணி வீரர்கள்
டோனி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, கே.எம்.ஆசிப், வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், பாப் டு பிளிஸ்சிஸ், இம்ரான் தாஹிர், ஜெகதீசன், கரண் ஷர்மா, நிகிடி, மிட்செல் சான்ட்னெர், சாய் கிஷோர், ரவீந்திர ஜடேஜா, உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், சாம் கர்ரன், ஷர்துல் தாகூர், சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா, ஹரிஷங்கர் ரெட்டி, ஹரி நிஷாந்த், பகத் வர்மா.
தலைமை பயிற்சியாளர்: ஸ்டீபன் பிளமிங் இவர் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it