Theme Check

IPL: கொரோனா போராட்டம்.. நீல நிற ஜெர்சியில் களம் காணும் விராட் கோலியின் பெங்களூர் அணி !!

IPL: கொரோனா போராட்டம்.. நீல நிற ஜெர்சியில் களம் காணும் விராட் கோலியின் பெங்களூர் அணி !!

IPL: கொரோனா போராட்டம்.. நீல நிற ஜெர்சியில் களம் காணும் விராட் கோலியின் பெங்களூர் அணி !!
X

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை மறுநாள் வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கப்பட உள்ளது. ஐபிஎல் 13ஆவது சீசனின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் நாளை மறுநாள் அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாக உள்ளது. இந்தியாவி நடைபெற்றப்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு அதன் தொடர்ச்சி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.

rcb இதில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வரும் 20ஆம் தேதியன்று கொல்கத்தா அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், RCB அணி அந்தப் போட்டியில் நீல நிறத்திலான புதிய ஜெர்ஸியில் களம் இறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக சிகப்பு நிறத்திலான ஜெர்ஸியில் அந்த அணி விளையாடும். அவ்வபோது பச்சை நிற ஜெர்ஸியிலும் விளையாடும். இது சூழல் பாதுகாப்பு குறித்த அவசியத்தை உணர்த்தும் ‘GO GREEN’-க்கு ஆதரவாக இந்த ஏற்பாடு. தற்போது மூன்றாவதாக நீல நிற ஜெர்ஸி.

rcb

கொரோனா காலத்தில் தங்களது உயிரை பணையம் வைத்து பணியாற்றிய முன்கள பணியாளர்களின் பணியை பாராட்டும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் இந்த ஏற்பாடு என RCB தெரிவித்துள்ளது. அவர்கள் அணிந்திருந்த பாதுகாப்பு கவச உடையின் (PPE Kit) நிறம் நீலம் என்பதால் அதே நிறத்தில் புதிய ஜெர்ஸி எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Tags:
Next Story
Share it