ஐபிஎல்: சிஎஸ்கே அணி பேட்டிங்.. முதல் வெற்றியை பதிவு செய்யுமா ?
ஐபிஎல்: சிஎஸ்கே அணி பேட்டிங்.. முதல் வெற்றியை பதிவு செய்யுமா ?

ஐபிஎல்தொடரில் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்கிறது.
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களில் முறையே கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப், ஐதராபாத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை கண்டு தத்தளித்து வருகிறது.
சென்னை அணியில், இந்தாண்டு பந்து வீச்சு, பேட்டிங், மற்றும் பீல்டிங்கும் மெச்சும்படி அமையவில்லை. வெற்றிக்கணக்கை தொடங்காத சென்னை அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு சிக்கலின்றி தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறது.
இருப்பினும் சென்னை அணி தனது முந்தைய தோல்விகளில் இருந்து மீண்டு வருவதற்கான வியூகங்களுடன் களம் இறங்கும்.
அதேநேரத்தில், டூ ப்ளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் பணிந்தது. அதன் பிறகு கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்தது. அந்த அணி முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பையை வீழ்த்தியது.
அந்த அணியின் பந்து வீச்சும் சிறப்பாக இருக்கிறது. வலுவான நிலையில் இருக்கும் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் வெற்றியை தன்வசப்படுத்த முடியும். வெற்றிக்கணக்கை தொடங்க சென்னை அணியும், உத்வேகத்தை தொடர பெங்களூரு அணியும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த நிலையில் டாஸ் வென்றது. இதனையடுத்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
Newstm.in
Tags:
Next Story

