Theme Check

IPL: ரசிகர்கள் ஷாக்.. பஞ்சாப் கேப்டன் ராகுல் திடீரென மருத்துவமனையில் அனுமதி !

IPL: ரசிகர்கள் ஷாக்.. பஞ்சாப் கேப்டன் ராகுல் திடீரென மருத்துவமனையில் அனுமதி !

IPL: ரசிகர்கள் ஷாக்.. பஞ்சாப் கேப்டன் ராகுல் திடீரென மருத்துவமனையில் அனுமதி !
X

இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல்களம் ஒருபக்கம் சூடுபிடித்தாலும் ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனும் இந்திய அணியின் முக்கியமான வீரருமான கே.எல்.ராகுலுக்கு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள அவருக்கு திடீரென அவருக்கு வயிற்றுபலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்ட அவருக்கு, குடல்வால் அழற்சி எனும் ‘அப்பெண்டிசைட்டிஸ்’ இருப்பது சோதனையில் தெரியவந்ததையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று இரவு கே.எல்.ராகுல் வயிற்று வலியால் துடித்தார். மருந்துகள் கொடுத்தும் சரியாகவில்லை. அவரை உடனே எமர்ஜென்சி அறைக்கு அழைத்து சென்று சோதனைகள் செய்ததில் அவருக்கு திடீரென குடல்வால் அழற்சி அதாவது அப்பெண்டிசைட்டிஸ் இருப்பது தெரியவந்தது. இதனை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்ற முடியும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், என்று கூறியுள்ளது.

இன்று அகமதாபாத்தில் இரவு ஆட்டத்தில் கிங்ஸ் பஞ்சாப் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது, இந்த நிலையில் அவருக்கு இப்படி ஒரு அப்பெண்டிசைட்டிஸ் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

அதேநேரத்தில் அவர் அறுவை சிகிச்சை முடிந்து உடனேயெல்லாம் ஆட முடியாது, எனவே இந்த ஐபிஎல் தொடர் அவரைப்பொறுத்தவரை முடிந்து விட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என விளையாட்டு விமர்சகர்கள் கூறுகின்றனர். எனினும் அவைதொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.

newstm.in


Tags:
Next Story
Share it