ஐபிஎல்: பஞ்சாப்க்கு தண்ணீர் காட்டிய கில்.. செம வெற்றியை பதிவுசெய்த குஜராத்
ஐபிஎல்: பஞ்சாப்க்கு தண்ணீர் காட்டிய கில்.. செம வெற்றியை பதிவுசெய்த குஜராத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்தார்.

குஜராத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், நல்கண்டே 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 7 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் பஞ்சாப் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். அதிக பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்திலேயே தொடர்ந்து இருந்தது.

சாய் சுதர்சனுடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தார் ஷுப்மான் கில். ஷுப்மான் கில் 59 பந்துகளில் ஒரு சிக்சர், 11 பவுண்டரி உள்பட 96 ரன்கள் எடுத்து வெளியேறினார். பாண்ட்யா 28 ரன்னில் அவுட்டானார். இறுதிக்கட்டத்தில் ராகுல் திவாட்டியா வழக்கம்போல் தனது பாணியில் பேட்டை சுழற்றினார்.
இறுதியில், குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. குஜராத் அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் மூன்று போட்டிகளிலும் விளையாடியுள்ள குஜராத் அணி மூன்றிலும் வெற்றிபெற்றுள்ளது.
newstm.in

