ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடக்கம்.. பிசிசிஐ அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம் !
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடக்கம்.. பிசிசிஐ அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம் !

14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெறும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடந்த போது வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதியன்று காலவரையின்றி போட்டி ஒத்திவைக்கப்பட்டன. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் பெரும் சோகம் அடைந்தனர்.

இந்த தொடரில் இதுவரை 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில், இன்னும் 31 போட்டிகள் எஞ்சியுள்ளன. ஏற்கனவே வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிய நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் இருப்பதால் வெளிநாட்டில் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வந்தது. இலங்கை, இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்களில் நாடுகளில் நடத்தலாம் என அழைப்பு விடுத்திந்தது.
இந்தநிலையில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன்முடிவில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் நடைபெறும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

மேலும் துபாய், சார்ஜா, அபுதாபியில் செப்டம்பர் 18 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 10ஆம் தேதிக்குள் போட்டிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். விரைவில் வீரர்களை அணி நிர்வாகங்கள் துபாய் அழைத்துச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

