ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி கிடையாது.. தலிபான்கள் உத்தரவால் ரசிகர்கள் கவலை !!
ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி கிடையாது.. தலிபான்கள் உத்தரவால் ரசிகர்கள் கவலை !!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை பிடித்து ஆட்சியமைத்துள்ளனர். தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வந்ததும், அங்குள்ள பெண்களின் நிலை குறித்து தான் சர்வதேச சமூகமும் கவலை பட்டது. தலிபான்கள் பெண்களுக்கான உரிமைகளை பறித்து வருகின்றனர். 
பெண்களை வலுகட்டாயமாக இழுத்துச்சென்று திருமணம் செய்வதாகவும், முந்தைய ஆட்சியின் போது தலிபான்களுக்கு எதிராக செயல்பட்ட பெண்களை கொலை செய்வதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் 200 பெண் நீதிபதிகள் தலைமறைவு வாழ்க்கை வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

மேலும் பெண்கள் விளையாட்டில் சேரக்கூடாது, பள்ளிக்கு செல்லக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறியவர்கள், ஆண்கள் என அனைவரும் போட்டியை நேரில் பார்த்து ரசிக்கிறார்கள்.
உற்சாகத்திலும், தங்களுடைய அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும் பெண்களும் ஆட்டம் போடுவார்கள். ஏற்கனவே பெண்களுக்கு எதிரான முடிவகளை எடுத்து வரும் தலிபான்கள், பெண்கள் போட்டியை பார்ப்பதாலும் ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஐ.பி.எல். போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என்று ஊடகங்களுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஐபிஎல் தொடரில் பெண் வர்ணனையாளர்கள், பெண் சியர் லீடர்கள் உள்ளிட்டவர்கள் இருப்பதால் அவரை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஒளிபரப்ப முடியாது எனவும் தலிபான்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
newstm.in

