Theme Check

பிப்.18ஆம் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம்.. பிசிசிஐ புதிய தகவல்.. ரசிகர்கள் ஆர்வம் !

பிப்.18ஆம் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம்.. பிசிசிஐ புதிய தகவல்.. ரசிகர்கள் ஆர்வம் !

பிப்.18ஆம் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம்.. பிசிசிஐ புதிய தகவல்.. ரசிகர்கள் ஆர்வம் !
X

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்நிலையில், ஐபிஎல் 2021 சீசனை இந்தியாவில் நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது.

அதன்படி முதற்கட்டமாக 8 அணிகளும் தக்கவைத்த வீரர்கள் பெயரையும், விடுவித்த வீரர்கள் பெயரையும் ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது. அதன்படி 8 அணிகளும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

இந்த நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி வீரர்கள் ஏலம் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆனால் வீரர்கள் ஏலம் எங்கு நடைபெறும் என்பது குறித்து முடிவாகவில்லை என பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார். அதேநேரம் ஏலம் நடைபெறும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதனிடையே இந்தாண்டு ஒவ்வொரு அணியிலும் புதுப்புது வீரர்கள் இடம்பெறுவர். இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it