ஐபிஎல் சாதனை.. பஞ்சாப் அணியிடம் இருந்து கே.எல்.ராகுலை பறிக்கும் புதிய அணி.. இத்தனை கோடி ரூபாய்க்கா !!
ஐபிஎல் சாதனை.. பஞ்சாப் அணியிடம் இருந்து கே.எல்.ராகுலை பறிக்கும் புதிய அணி.. இத்தனை கோடி ரூபாய்க்கா !!

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் இணைவதோடு, அணிகளுக்கு வீரர்களை எடுக்கும் மெகா ஏலமும் நடைபெற உள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தில் அணியின் 3 முதல் 4 வீரர்களை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தில் விடப்படுவார்கள்.
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கே.எல்.ராகுலுக்கு லக்னோ அணி ரூ.20 கோடி கொடுக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2018ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி ராகுலை ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால் தற்போது பஞ்சாப் அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதால் புதிதாக வந்துள்ள லக்னோ அணி கே.எல்.ராகுலை வாங்க உள்ளது. அதுவும் ஐபிஎல் வட்டாரத்தில் இதுவரை எந்த வீரரும் பெறாத வரலாறு காணாத தொகையான ரூ.20 கோடியை அளிக்க லக்னோ அணி முடிவெடுத்துள்ளதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும்முன் நாளைக்குள் அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும், அதே போல் புதிய அணி உரிமையாளர்கள் 3 வீரர்களை ஏலத்துக்கு முன்னாலேயே ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இந்நிலையில் ஏறக்குறைய லக்னோ அணியின் கேப்டனாகவே கே.எல்.ராகுல் செல்வார் எனுன் நிலையில் நட்சத்திர வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டு ரூ.20 கோடிக்கு அவர் ஒப்பந்திக்கப்படாலம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏன் இந்த 20 கோடி ரூபாய் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழலாம். அதற்கும் ஒரு காரணம் உள்ளது. என்னவென்றால் பஞ்சாப் கிங்ஸ் அணியிலேயே ராகுல் இருப்பாரேயானால் அவரை ரூ.16 கோடிக்கு அந்த அணி தக்க வைக்க வேண்டும். ஐபிஎல் 2018 முதலே சிறந்த தொடக்க வீரராக ராகுல் இருந்து வருகிறார்.

லக்னோ அணியின் உரிமையாளர்களான ஆர்பிஎஸ்ஜி குரூப் மிகப்பெரிய தொகையான ரூ.7090 கோடி கொடுத்து அணியை எடுத்துள்ளது. ரஷீத் கானுக்கும் ரூ.16 கோடி கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. 2018ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரஷீத் கானை ரூ.9 கோடிக்கு தக்க வைத்தது. இந்த முறை ஹைதராபாத் இவரை தக்க வைத்தால் ரூ.12 கோடிக்குத் தக்க வைக்கப்பட வேண்டும் இப்படியோரு சூழல் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை விட்டுக்கொடுத்தால் மற்ற வீரர்களை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

இதில், ராகுல் பஞ்சாப் கிங்சிலிருந்து லக்னோவுக்கு செல்வது ஏறக்குறைய உறுதியான நிலையில் ரஷீத் கான் நிலவரம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
newstm.in

