Theme Check

டெல்லி வன்முறைக்கு பேஸ்புக்கும் ஒரு காரணமா?- குறுகிய நாளில் 300% அதிகம் பகிரப்பட்ட வெறுப்புணர்வு கருத்துக்கள் !!

டெல்லி வன்முறைக்கு பேஸ்புக்கும் ஒரு காரணமா?- குறுகிய நாளில் 300% அதிகம் பகிரப்பட்ட வெறுப்புணர்வு கருத்துக்கள் !!

டெல்லி வன்முறைக்கு பேஸ்புக்கும் ஒரு காரணமா?- குறுகிய நாளில் 300% அதிகம் பகிரப்பட்ட வெறுப்புணர்வு கருத்துக்கள் !!
X

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஒரே இடத்தில் இருதரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டப்போது திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சிறிது நேரத்தில் பெரும் வன்முறையாக வெடித்தது.

கல்வீச்சு, தீவைப்பு, அடித்து நொறுக்கல் என இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஏராளமான வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒருசில இடங்களில் மசூதிகளுக்கும் தீவைக்கப்பட்டன. வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளே இந்த வன்முறை பரவ காரணமாக இருந்ததாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.

facebook

இந்தநிலையில் தற்போது, இந்த வன்முறைக்கு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைதளங்களில் பல்வேறு நபர்களால் பதிவிடப்பட்ட வெறுப்புணர்வு தூண்டும் கருத்துக்களும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில், டெல்லி வன்முறை நடத்த சமயத்தில் பேஸ்புக்கில் வெறுப்புணர்வு கருத்துக்கள் 300% அதிகமாக இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நடத்திய உள் ஆய்வில், டெல்லி வன்முறை நடைபெற்ற சமயத்தில் பேஸ்புக்கில் வெறுப்புணர்வு கருத்துக்கள் 300% அதிகமாக பரவியுள்ளது. தகவறான தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை கட்டுப்படுத்த முடியாமல் பேஸ்புக் திணறி வந்துள்ளது.

facebook

பேஸ்புக்கில் மற்றும் வாட்ஸ்அப்பில் வன்முறை, வெறுப்புணர்வு, மோதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பெரிய அளவிலான கருத்துளுக்கு இந்திய பயனாளர்கள் உள்ளாகியுள்ளனர். இந்த வெறுப்புணர்வு கருத்துக்கள் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் முதலே பேஸ்புக்கில் அதிகமாக பரவத்தொடங்கியுள்ளது, என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளன.

newstm.in

Tags:
Next Story
Share it