Theme Check

போர் முடிவுக்கு வருமா?- ரஷ்யா- உக்ரைன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை !!

போர் முடிவுக்கு வருமா?- ரஷ்யா- உக்ரைன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை !!

போர் முடிவுக்கு வருமா?- ரஷ்யா- உக்ரைன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை !!
X

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய படைகள் முன்பைவிட இப்போது தீவிரப்படுத்தியுள்ளன. போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள், மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் வேளையில் தாக்குதல் தீவிரமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் நகரங்கள் பற்றி எரிந்து வருகின்றன. குறிப்பாக அந்நாட்டின் அரசு அலுவலகங்கள், காவல்துறை, உளவுத்துறை அலுவலகங்கள், ராணுவ தடவாளங்கள், விமானப்படை தளம் என குறிவைத்து ரஷ்யா தாக்கி வருகிறது.

அதாவது, உக்ரைனில் பாதுகாப்பான இடம் என்ற ஒன்று இல்லை என கூறும் அளவுக்கு ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனிடையே உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இறங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

போர் முடிவுக்கு வருமா?- ரஷ்யா- உக்ரைன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை !!

ஏற்கனவே இதேபோன்று நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளை ரஷ்ய அதிபர் புதின் நிராகரித்துவிட்ட நிலையில் ஜெலன்ஸ்கியின் இந்த அறிவிப்பை அவர் ஏற்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க தான் விரும்பவில்லை என புதின் தெரிவித்தார். துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இதனை அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் உக்ரைன்- ரஷ்யா இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் - ரஷ்யா இடையேயான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. இன்று காணொலி காட்சியின் வாயிலாக பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என கருதப்படுகிறது.

newstm.in

Next Story
Share it