அரசு பணிக்கு தயாரா? - டி.என்.பி.எஸ்.சி. புதிய பாட திட்டம் வெளியீடு !!
அரசு பணிக்கு தயாரா? - டி.என்.பி.எஸ்.சி. புதிய பாட திட்டம் வெளியீடு !!

'குரூப் - 2, குரூப் - 4' உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாட திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுக்கான, 'அப்ஜெக்டிவ்' என்ற கொள்குறி வகை தேர்வில், குரூப் - 3, குரூப்- 4, குரூப் - 7 பி, சிறை அலுவலர் மற்றும் சிறை உதவி அலுவலர் பதவிக்கான குரூப் - 8 ஆகிய தேர்வுகளுக்கு, மேம்படுத்தப்பட்ட பாட திட்டம், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
மேலும், குடிமை பணிகளுக்கான 'குரூப் -2, 2 ஏ' முதல்நிலை தேர்வுக்கான, மேம்படுத்தப்பட்ட பாட திட்டமும் இணையதளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த பாட திட்டத்தை பார்த்து கொள்ளவும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் ஆதிக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் தேர்வுக்கு தயாராகி வந்த பல லட்சம் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், நடப்பு ஆண்டில் நிச்சயமான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்று கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குருப் 2 மற்றும் குருப் 4 தேர்வுக்காக அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தற்போது பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில ஆங்கிலப்பாடம் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுளளது. தமிழ் மொழித்தாளில் வெற்றி பெற்றால் மட்டுமே மற்ற தாள்கள் திருத்தப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, குரூப் 4 மற்றும் குரூப் 2 பணிகளுக்கு நடத்தப்படும் தோ்வுகளுக்காக மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.
newstm.in

