இந்தியாவில் உருவான புதிய வைரஸ் ஆபத்தானதா? தொடரும் ஆய்வுகள்!
இந்தியாவில் உருவான புதிய வைரஸ் ஆபத்தானதா? தொடரும் ஆய்வுகள்!

இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவி வருகிறது. இந்த அலையில் கொத்து கொத்தாக வைரஸ் பரவி வருவதாகவும் இந்தியாவில் உள்ள கொரோனாப் புதிய உருமாற்றம் பெற்றதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் அதிகளவில் காணப்படுவதாகவும் இவற்றை வழக்கமான பரிசோதனைகள் மூலம் உறுதி செய்ய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை வைரஸ்கள், நோயின் பாதிப்பையும் அதிகரித்து உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியவை என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இந்த புது வகை வைரஸ் குறித்து மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் அனுராக் அகர்வால் விடுத்த செய்திக்குறிப்பில் “ உலக நாடுகளில் மற்றும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வைரசோ அல்லது இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை இரட்டை பிறழ்வு திரிபு வைரசோ தீவிரமான பாதிப்பையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்துபவை அல்ல. இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட மாதிரியும், இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வைரசும் வெவ்வேறானவை. இந்திய வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்பது இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை .ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என விளக்கம் அளித்துள்ளார்.

