தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு உயர்வா ? இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல !!
தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு உயர்வா ? இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல !!

மக்கள் இந்த கொடிய கொரோனா நோய்யில் இருந்து தப்பிக்க போராடி கொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளி என அதன் விலை தொடர்ந்து ஏறி கொண்டே செல்கிறது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணத்தை சிறுகசிறுக சேமித்து, தங்கம் வாங்குவதை பலரும் ஒரு முக்கிய பழக்கமாக வைத்திருக்கிறார்கள். செலவு போக கையில் பணம் சேர்ந்தால் அவர்கள் நினைவுக்கு முதலில் வருவது தங்கம்தான். அப்படிப்பட்ட தங்கத்தை இனி வாங்குவது கஷ்டம் போல அதன் விலையும் ஏறிக்கொண்டே செல்கிறது.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,968-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்து, ரூ.4,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ரூ.69,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

