Theme Check

சென்னைக்கு இந்த முறை பெண் மேயரா? திமுகவுக்குள் நடக்கும் கடும் போட்டி !!

சென்னைக்கு இந்த முறை பெண் மேயரா? திமுகவுக்குள் நடக்கும் கடும் போட்டி !!

சென்னைக்கு இந்த முறை பெண் மேயரா? திமுகவுக்குள் நடக்கும் கடும் போட்டி !!
X

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியாகியுள்ள நிலையில் ஆளும் கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும் வெற்றிபெற்றது. தமிழகத்தில் ஆட்சியையும் பிடித்தது. அடுத்து நடந்த கிராம புற உள்ளாட்சித் தேர்லில் திமுக பெரும் வெற்றிபெற்றது. ஆனால், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை விட உள்ளாட்சித் தேர்தலின் போதுதான் ஒவ்வொரு கட்சிகளும் அதிக சலசலப்புகளை எதிர்கொண்டன. அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சீட் கேட்டு பலரும் அந்தந்த கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

திமுகவில் மாநிலம் முழுவதும் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தலைவர், வார்டு கவுன்சிலர் இடங்களுக்கு போட்டியிட பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். கூட்டணிக் கட்சிகளும் ஒவ்வொரு பகுதியிலும் சீட்டு கேட்டு துண்டு போட தொடங்கிவிட்டனர். மாவட்ட செயலாளர்களுடன் பேசி முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என திமுக தலைமை கைவிரித்துவிட கூட்டணிக் கட்சித் தலைவர்களோ கையை பிசைந்துகொண்டு நிற்கின்றனர்.
kn nehru


திமுகவுக்கு அண்மையில் புது பிரச்னையை ஏற்படுத்தினார் அமைச்சர் கே.என்.நேரு. இவர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனை ஒருமையில் பேசினார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் வருத்தம் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, திருப்பூர், கோவை மேயர் இடங்கள் வேண்டும் என்றும் அதற்காக வெங்கடேசன் கனிமொழி மூலம் காய் நகர்த்தினார் என்றும் நேருவின் காதுக்கு செய்தி சென்றதாகவும் அதன்பின்னர் தான் அமைச்சர் கே.என். நேரு அவ்வாறு பேசினார் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.

சென்னையில் திமுக வார்டு கவுன்சிலர் இடங்கள் அந்தந்த வட்டச் செயலளார்களுக்கு தான் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை கட்சிக்கு புதிதாக வந்தவர்கள், சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இந்த முறை வழங்க முயற்சிகள் நடைபெறுகிறதாம். இதனால் வட்டச் செயலாளர்கள் கொதித்துப் போயுள்ளனராம்.

kn nehru

இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சென்னை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட முக்கிய புள்ளிகள் திமுக தலைமையை நெருங்கி வரும் நிலையில் இந்த தகவல் அவர்களை திண்டாடவைத்துள்ளது.


newstm.in

Next Story
Share it