கறிவேப்பிலையில் இவ்வளவு இருக்கா? தெரிஞ்சுக்கிட்டா தூக்கி போட மாட்டீங்க..
உடல் பருமனால் மனஅழுத்தம், உடல் ரீதியான பிரச்னைகள் என்று இருப்பவர்கள் கறிவேப்பி லையை அதிகம் உணவில் சேர்த்துவந்தால் சோர்வு நீங்கி உற்சாகமாக வளையவருவார்கள். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் பருமனைக் குறைக்கவும் கறிவேப்பிலை உதவுகிறது. இரத்த சோகையை நீக்கும் மகத்தான உணவுப் பொருளாக கறிவேப்பிலை விளங்குகின்றது.

கறிவேப்பிலையை உணவில் பார்த்தாலே இன்று பெரும்பாலானோர் முகம் சுளிக்கிறார்கள். ஆனால் எல்லா உணவு வகைகளிலும் இனிப்பு நீங்கலாக கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதால் நறுமணமும் சுவையும் பன்மடங்கு அதிகமாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்ன இருக்கு கறிவேப்பிலையில் என்று கேட்கலாம். உடம்பிற்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற அனைத்தும் அதிகமாக இருக்கின்றது.

உடல் பருமனால் மனஅழுத்தம், உடல் ரீதியான பிரச்னைகள் என்று இருப்பவர்கள் கறிவேப்பி லையை அதிகம் உணவில் சேர்த்துவந்தால் சோர்வு நீங்கி உற்சாகமாக வளையவருவார்கள். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் பருமனைக் குறைக்கவும் கறிவேப்பிலை உதவுகிறது. இரத்த சோகையை நீக்கும் மகத்தான உணவுப் பொருளாக கறிவேப்பிலை விளங்கு கின்றது. எண்ணெயில் பொறித்து கொடுத்தாலும் மொறு மொறு கறிவேப்பிலையை வெளியே வீசிவிடுவார்கள். இதற்கு பெரியவர்களும் விதிவிலக்கல்ல.அதனால் எல்லோருக்கும் பிடித்த மாதிரி கறிவேப்பிலையைத் துவையலாக்கிவிடுங்கள்.
தேவையான பொருள்கள்:
கறிவேப்பிலை – 4கப்,
கடுகு- 4 டீஸ்பூன்,
உ.பருப்பு- 2 டேபிள் கரண்டி, வரமிளகாய், – காரத்துக்கேற்ப, தேங்காய்- அரை மூடி, உப்பு, புளி, நல்லெண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை:
கறிவேப்பிலையைச் சுத்தம் செய்து தேங்காயையும் நறுக்கி வைக்கவும். வாண லியில் கடுகு, உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் தாளித்து, காரத்துக்கேற்ப வரமிளகாய் கொஞ்சம் புளி சேர்த்து வதக்கி கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை நல்லெண்ணெய் விட்டு வதக்கவும்.
சுவையான கறிவேப்பிலைத் துவையலை உதிராக வடித்த சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கு தொட்டு கொள்ளலாம். தோசையில் பரத்தி கொடுக்க லாம். தயிர்சாதத்துக்கு ஏற்ற சைட்டிஷ் இது. பத்தே நிமிடத்தில் செய்வதற்கு ஏற்ப எளிமையான டிஷ் இது.
இட்லிப்பொடியை போன்று கறிவேப்பிலையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடி செய்தும் உதிரான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். மொத்த சத்துக்களை உள்ளடக்கியிருக்கும் கறிவேப்பிலையின் பயனை இந்தத் துவையலில் முழுமையாக பெறலாம் அதிலும் சப்புக்கொட்ட வைக்கும் சுவையுடன்.
newstm.in

