அஜித் படத்துக்கு இப்படி ஒரு பிரச்னையா?
அஜித் படத்துக்கு இப்படி ஒரு பிரச்னையா?

அஜித்தின் வலிமை படம் தீபாவளிக்கு ஏன் ரிலீஸ் செய்யப்படவில்லை என்று இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த தீபாவளி தல தீபாவளி என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் வலிமை படம் தீபாவளிக்கு ஏன் ரிலீஸாகவில்லை என்று இயக்குநர் வினோத் தெரிவித்துள்ளார். அதில், வலிமையை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் தியேட்டர் பிரச்சனையால் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றார்.

அஜித் போன்ற பெரிய நடிகரின் படத்திற்கே தியேட்டர் பிரச்னையா என சினிமா ரசிகர்கள் வியக்கிறார்கள். வலிமை படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் எதுவும் தெரிவிக்காமல் இருப்பது தான் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது.
அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். அப்டேட் கேட்டு இன்னும் எத்தனை வருஷம் தான் கெஞ்சிக் கதறுவது, இப்பவே கண்ணை கெட்டுதே என்கிறார்கள் அஜித் ரசிகர்கள். மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

