Theme Check

இதுதான் ஜனநாயகமா..? : கேட்கிறார் காயத்ரி ரகுராம் !!

இதுதான் ஜனநாயகமா..? : கேட்கிறார் காயத்ரி ரகுராம் !!

இதுதான் ஜனநாயகமா..? : கேட்கிறார் காயத்ரி ரகுராம் !!
X

“எதிர்க்கட்சித் தலைவர்களை நாய்கள், துர்நாற்றம் என அழைத்த போதும், பெண்களை அவமரியாதையாக பேசியபோதும் திமுகவினர் மீது ஏன் கைது நடவடிக்கை எடுக்கவில்லை” என, காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக திமுக ஐடி பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில், யூ-டியூபர் கிஷோர் கே.சாமியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கிஷோர் கே.சாமி கைதுக்கு பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "திமுக தலைவர்களை விமர்சித்ததற்காக கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன்.


பிரதமர் குறித்து உதயநிதி ஸ்டாலின் பொய் பேசும்போதும், மு.க.ஸ்டாலின் பிரதமர் குறித்து பொய் பேசும்போதும், திருமாவளவன் இந்து தர்மம், பிராமணர்கள் மற்றும் பிரதமர் குறித்து அவதூறாக பேசும் போதும் ஒட்டுமொத்த திமுகவினருமே குறிப்பிட்ட ஒரு சமுதாயமான பிராமணர்கள் குறித்து தவறாக பேசிவருகிறார்கள். தற்போது அவர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் குறித்து அவதூறாக பேசுகின்றனர்.

எதிர்கட்சித் தலைவர்களை நாய்கள், துர்நாற்றம் என அழைத்த போதும், பெண்களை அவமரியாதையாக பேசியபோதும் திமுகவினர் மீது ஏன் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை..? தனி நபர்கள் மட்டும் ஏன் கைது செய்யப்படுகிறார்கள்..? சட்டம் சாமானியர்களுக்கு மட்டும் தானா..?

திமுகவை விரும்ப வேண்டும், திமுகவை பின்பற்ற வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அது போன்ற ஒரு சர்வாதிகாரத்தை ஏற்க முடியாது. நீங்கள் எந்த வகையில் பேசுகிறீர்களோ, அதைத் தான் திரும்பவும் எதிர்பார்க்க வேண்டும். உள்ளதை கூறியதற்காக ஒருவர் கைது செய்யப்படுவது தான் ஜனநாயகமா..? திமுக, அனைத்து இந்துக்களையும் மிரட்டி, கைது செய்து வருகிறது” என, காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.

Tags:
Next Story
Share it