Theme Check

சுந்தரியோட வருங்கால கணவர் இவர்தானா? - வெளியானது நிச்சயதார்த்த புகைப்படங்கள் !

சுந்தரியோட வருங்கால கணவர் இவர்தானா? - வெளியானது நிச்சயதார்த்த புகைப்படங்கள் !

சுந்தரியோட வருங்கால கணவர் இவர்தானா? - வெளியானது நிச்சயதார்த்த புகைப்படங்கள் !
X

சுந்தரி சீரியல் நடிகையான கேப்ரியல்லா செல்லஸுக்கு தனது நீண்ட நாள் காதலருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா செல்லஸ். மேலும் வாய்ப்புகள் கிடைக்காததால் டிக்டாக் தளத்தில் வீடியோக்களை பதிவிட்டு ரசிர்களை கவர்ந்து வந்தார். இதனால் கேப்ரியல்லாவுக்கு சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

sundari

குறிப்பாக நயன்தாராவுடன் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது. அதாவது, நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்த ஐரா படத்தில் கேப்பிரியல்லா நடித்திருந்தார். அதனை தொடர்ந்து கேப்பிரியல்லா சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார். தமிழகம் முழுவதும் சுந்தரி சீரியல் தான் தற்போது பிரபலமாக உள்ளது.

சுந்தரி சீரியலில் சுந்தரி கதாப்பாத்திரல் லீடிங் ரோலில் நடிக்கும் கேப்பிரியல்லா கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தி வருகிறார். இந்த சீரியல் அவருக்கு என பெரும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தான் நடிகை கேப்ரியல்லாவின் கல்யாண பேச்சு வெளியாகியுள்ளது. நடிகை கேப்ரியல்லா தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடிக்கவுள்ளார்.

sundari

கேப்ரியல்லாவின் காதலர் ஆகாஷும் மீடியா கேமரா மேனாக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த இணைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தங்களின் திருமணம் குறித்து பேசியுள்ள நடிகை கேப்பிரியல்லா, தன்னுடைய துறையில் இருபவர் தான் என்னை நன்றாக புரிந்து கொள்ள முடியும். ஆகாஷ் தனது நடிப்பை பாராட்டுவார். அதே சமயம் ஏதாவது குறை இருந்தாலும் கூறுவார் என்று தெரிவித்துள்ளார்.

sundari

எனினும் கேப்ரியல்லாவின் திருமண தேதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் வெளியான நிலையில் சின்னத்திரை நடிகர், நடிகைகள், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

sundari
newstm.in

Next Story
Share it