ஒரு ஜென்டில்மேன் செய்யுற வேலையா இது ! ஏடிஎம்-ல் சானிடைசர் திருட்டு... வீடியோ !!
ஒரு ஜென்டில்மேன் செய்யுற வேலையா இது ! ஏடிஎம்-ல் சானிடைசர் திருட்டு... வீடியோ !!

கொரோனா என்னும் கொடிய வைரஸில் இருந்து தப்பிக்க உலக நாடுகள் போராடி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. எனினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது, கையுறை அணிவது, அடிக்கடி சானிடைசரை பயன்படுத்துவது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை பல்வேறு நாடுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால், அதற்கு இடையூறாக இருக்கும் சில நடவடிக்கைகளும் ஆங்காங்கே நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அதில், ஏடிஎம் மையத்தில் உள்ள பதிவான சிசிடிவி காட்சி இடம்பெற்றுள்ளது. பார்த்தால் படித்த வசதியானவர் போல இருக்கும் ஒருவர், ஏடிஎம் எந்திரத்தின் முன்பு நிற்கிறார். பரிவர்த்தனை முடிந்து தனது ஏடிஎம் கார்டை எடுத்த அவர், சுற்றும் முற்றும் பார்க்கிறார். அப்போது அங்கிருந்த சானிடைசர் பாட்டில் அவரது கண்ணில் படுகிறது. உடனே அவர் அந்த பாட்டிலை அலேக்காக எடுத்து தனது பைக்குள் வைத்துக் கொள்கிறார்.
சிசிடிவி காட்சியில் காணப்படும் இந்த ஜென்டில்மேனின் நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
These are kleptomaniac. 😡
— Dipanshu Kabra (@ipskabra) April 30, 2021
देश मे लाखों ATM हैं. इन मूर्खों से सैनिटाइजर बचाने के लिए हर ATM में 200-300रु का पिंजड़ा लगाना पड़े तो सैकड़ों करोड़ रु इसी में लगेंगे.
आपके मर्यादित आचरण से ये पैसे बचते और आपकी भलाई में ही लगते...
खैर... #HumNahiSudhrenge. pic.twitter.com/6zB94qV9FC
newstm.in

