ஊராட்சி மன்ற தலைவர் மகன் செய்யுற வேலையா இது .. போக்சோவில் அதிரடி கைது!!
ஊராட்சி மன்ற தலைவர் மகன் செய்யுற வேலையா இது .. போக்சோவில் அதிரடி கைது!!

சௌந்திரபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார் நெல்லை மாவட்டம் , இளையநயினார் குளத்தைச் சேர்ந்த முருகேசன்.இவரது மகன் வெங்கடேஷ் என்பர் ஐ.டி.ஐ படித்துவிட்டு மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில், வெங்கடேஷின் அக்கா உவரி அருகே குட்டம் கிராமத்தில் திருமணமாகி வசித்து வருகிறார். வெங்கடேசன் அக்கா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அக்கா வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் பிளஸ் 1 மாணவியை தன வலையில் விழவைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதன் மூலம் அந்த மாணவி கர்ப்பமானார்.
இந்நிலையில் மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ந்து போன மாணவியின் பெற்றோர் வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் வெங்கடேஷ் மீது வழக்குபதிவு செய்து அவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

