Theme Check

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த இளைஞருக்கு இதுதான் தண்டனையா? மக்கள் அதிருப்தி

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த இளைஞருக்கு இதுதான் தண்டனையா? மக்கள் அதிருப்தி

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த இளைஞருக்கு இதுதான் தண்டனையா? மக்கள் அதிருப்தி
X

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது‌‌ தன்னை வரவேற்க பள்ளிக்கூடத்துக்கு வெளியே காத்திருந்த மக்களிடம் சென்று கைக்குலுக்கி உற்சாகப்படுத்தினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென அதிபர் மெக்ரான் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிபர் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்தது.

இதையடுத்து மெக்ரானை கன்னத்தில் அறைந்த டேமியன் தாரெல் என்ற இளைஞரையும், இந்த சம்பவத்தை தனது செல்போனில் படம் பிடித்த மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தனது கன்னத்தில் அறைந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை அதிபர் மெக்ரான் கூறிவிட்டார். மேலும் தனிப்பட்ட முறையில் அந்த இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என ‌ கூறியிருந்தார்.

இந்நிலையில், அதிபர் மெக்ரானை கன்னத்தில் அறைந்தது தொடர்பாக இளைஞர் டேமியன் தாரெலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிபரை கன்னத்தில் அறைந்ததை ஒப்புக்கொண்ட டேமியன் தாரெல், தான் பெரியளவில் கவனிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கில் இதை செய்ததாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து அதிபரை கன்னத்தில் அறைந்ததற்காக அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்த நீதிபதிகள், அதில் 14 மாதங்களை ரத்து செய்துவிட்டு 4 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதனையடுத்து அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.


newstm.in

Tags:
Next Story
Share it