Theme Check

கேரளாவுக்கே இந்த நிலைமையா.. மீண்டும் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள் !!

கேரளாவுக்கே இந்த நிலைமையா.. மீண்டும் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள் !!

கேரளாவுக்கே இந்த நிலைமையா.. மீண்டும் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள் !!
X

நாடு முழுதும் கொரோனா இரண்டாம் அலை கடுமையாகப் பரவி வரும் நிலையில் கேரளாவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

அதன்படி ஏற்கனவே, அரசு அலுவலகங்களில் பணி நாட்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்ல வேண்டும், ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் ஆகியவற்றில் உணவுகள் பார்சல் மட்டும் வழங்கலாம், பள்ளிகளில் ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடக்கும், டியூசன் மையங்கள் திறக்க அனுமதியில்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

இந்த நிலையில், கேரளாவில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தியேட்டர்கள், பார்கள், ஜிம்கள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயில் விஜயன் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், மே-2ஆம் தேதியும் அதற்கு பிறகும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தை தவிர்க்க கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 21,890 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it