அதிமுக ஆட்சியை இழக்க சசிகலா சொல்லும் இதுதான் காரணமா..?
அதிமுக ஆட்சியை இழக்க சசிகலா சொல்லும் இதுதான் காரணமா..?

அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்த சசிகலா கடந்த சில வாரங்களாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அதிமுகவை மீட்டெடுப்பது தனது லட்சியம், நிச்சயம் அதிமுகவை மீட்டெடுப்பேன்; தொண்டர்களை சந்திப்பேன் என கூறி வருகிறார்.
சசிகலாவுடன் பேசுபவர்களை, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுகவிலிருந்து நீக்கி வருகின்றர். நேற்று கூட, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் சசிகலா, முன்னாள் எம்எல்ஏ கோதண்டபாணியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர், “எல்லோருமே அம்மாவின் பிள்ளைகள்தான். எல்லோரும் எனக்கு ஒன்றுதான்; எந்த வித்தியாசமும் இல்லை. அதனால், எதற்கும் கவலைப்படாதீர்கள். விரைவில் நல்லது நடக்கும்.லாக்டவுன் முடிந்தவுடன் அம்மா நினைவிடத்திற்கு சென்று அம்மாவை பார்த்து விட்டு அதன் பிறகு தொண்டர்களை சந்திக்கிறேன். அம்மா மிகவும் கஷ்டப்பட்டு உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போது கூட 2016ல் வெற்றி பெற்று எம்எல்ஏக்களை கொண்டு வந்தார்.
அதை தூக்கிப் போடுவது என்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை இவர்கள் உணர வேண்டும். ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை ஏற்காததால் ஆட்சியை இழந்து நிற்கிறோம்” என்று கூறியுள்ளார்.
Tags:
Next Story

