உங்கள் வாட்ஸ்அப் ஒர்க்காகிறதா? - அப்போ தப்பித்தீர்கள்.. 16 லட்சம் பேருக்கு ஆப்பு !!
உங்கள் வாட்ஸ்அப் ஒர்க்காகிறதா? - அப்போ தப்பித்தீர்கள்.. 16 லட்சம் பேருக்கு ஆப்பு !!

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளை முடக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல கோடி பயனர்களை வாடக்கையாளர்களாக கொண்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். தகவல்களை அனுப்புவதற்கு வாட்ஸ்அப் பெரும் உதவியாக உள்ளது. புகைப்படம், வீடியோக்கள் மட்டுமல்லாமல் தற்போது பணம் அனுப்பும் முறையும் வந்துவிட்டது. அதேநேரத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்களை கொண்டுவந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

அதேநேரத்தில் திடீரென அவ்வபோது வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியும் வருகிறது. இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நிறுவனம் 122 கணக்குகளை தடை செய்துள்ளோம்.
அதேபோல வாட்ஸ்அப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காக 16.66 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளோம். நாங்கள் குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம், ஏனென்றால் தீங்கு ஏற்பட்ட பிறகு அதைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை முதலில் தடுப்பது மிகவும் சிறந்தது, இவ்வாறு தடை குறித்து வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.
newstm.in

