தலீத் சமூகத்துக்கு எதிராக கருத்து- கைது செய்யப்படுகிறாரா யுவராஜ் சிங்..?
தலீத் சமூகத்துக்கு எதிராக கருத்து- கைது செய்யப்படுகிறாரா யுவராஜ் சிங்..?

இந்திய கிரிக்கெட் வீரர் யஜூவேந்திரா சாஹல் சார்ந்துள்ள சமூகப் பின்னணியை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக யுவராஜ் சிங் மீது கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட புகாரின் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் ரோஹித் சர்மா மற்றும் யுவராஜ் சிங் இருவரும் நேரலையில் பேசிக்கொண்டனர். அப்போது சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் சார்ந்துள்ள தலீத் சமூகத்தினருக்கு எதிராக யுவராஜ் சிங் பேசியதாக சர்ச்சைகள் எழுந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜத் கல்சான் என்பவர் நேற்று ஹிசார் நகர காவல்துறையிடம் புகார் அளித்தார். தலித் சமுகத்தினருக்கு எதிராக கருத்து தெரிவித்த யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறை யுவராஜ் சிங் மீது, ஐசிபி 153, 153ஏ, 295, 505 ஆகிய பிரிவுகளிலும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 3 (1), 3 (1எஸ்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவுச் செய்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக இந்த வீடியோ விவகாரம் வெளியான போதே, மிகுந்த சர்ச்சை உருவானது. அப்போது வீடியோ வெளியிட்ட யுவராஜ் சிங், யாரிடமும் எனக்கு பாகுபாடு கிடையாது. சாதி, மதம், நிறம், பாலினம் எதுவாக இருந்தாலும் எனக்குப் பாகுபாடு கிடையாது. தொடர்ந்து மக்கள் நலனுக்காக செயல்படுவேன். தனிநபர்களுக்கு மரியாதையான வாழ்க்கை, கவுரவம் கிடைக்க வேண்டும் என நம்புகிறேன் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
— Yuvraj Singh (@YUVSTRONG12) June 5, 2020

