இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை.. காஸாவில் பெரும் இழப்பு.. தவிக்கும் மக்கள் !
இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை.. காஸாவில் பெரும் இழப்பு.. தவிக்கும் மக்கள் !

இஸ்ரேல் இடைவிடாமல் காஸா மீது குண்டுகளை வீசி தாக்கி வருவதால் அங்கு பெரும்பாலான கட்டிடங்கள் உருக்குலைந்தும் தரைமட்டமாகியும் வருகிறது. உலக நாடுகளை குரல்களை காதில் கேட்காமல் இரு நாடுகளும் மோதிக்கொள்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே இரண்டாவது வாரமாக சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் அழைப்பு விடுத்திருந்தாலும் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. இரு நாடுகளும் வானில் ஏவுகனை வீசி மாறி மாறி தாக்கிக்கொண்டு வருகின்றன.

இதில் காஸாவில் தான் பெரியளவில் பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அங்கு முக்கிய சாலைகள், பாதுகாப்புக் கட்டடங்கள், போராளிகளின் பயிற்சி முகாம்கள், குடியிருப்புக் கட்டடங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியது. இந்த வெடிச்சத்தம் இரவு முழுவதும் பாலஸ்தீனத்தின் பல பகுதிகளில் எதிரொலித்தது.

ஹமாஸ் உயர்மட்ட தளபதிகளுக்குச் சொந்தமான ஒன்பது குடியிருப்பு களையும் இஸ்ரேலிய ராணுவம் தரைமட்டமாக்கியது. காஸா போராளிகள் ஏறக்குறைய 60 ஏவுகணைகளை இஸ்ரேலிய நகரங்கள் மீது பாய்ச்சியதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டியது. எனினும் அதனை வானிலேயே தடுத்து நிறுத்தி இஸ்ரேல் அழித்துதது. இதேபோல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தமுடியாத அளவுக்கு வானிலையே ஏவுகனைகளை தாக்கி அழிக்கிறது.

ஹமாஸ் அமைப்பிடம் அப்படி கருவி இல்லாததால் காஸா பெரும் அழிவை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் வடக்கு காஸாவில் உள்ள தொழிற்சாலை தீப்பற்றி எரிந்தது. அதிகாலை முழுவதும் இஸ்ரேலின் குண்டு மழை சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் இதுவரை 58 குழந்தைகள், 34 பெண்கள் உட்பட 197 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
போரை நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆதரவை தெரிவித்து உள்ளார். மேலும் எகிப்து மற்றும் பிற நட்பு நாடுகளுடன் அமெரிக்காவின் பங்களிப்பு குறித்து விவாதித்து உள்ளார். இதனையடுத்தும் இஸ்ரேன் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
newstm.in

