திட்டமிட்டபடி மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டி நடைபெறும்- இஸ்ரேல் உறுதி !
திட்டமிட்டபடி மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டி நடைபெறும்- இஸ்ரேல் உறுதி !

இஸ்ரேல் நாட்டில் அடுத்த மாதம் திட்டமிட்டபடி மிஸ் யூனிவர்ஸ் போட்டி நடைபெறும் என அந்த நாட்டின் சுற்றுலா துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமிக்ரான்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இஸ்ரேல் நாட்டிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதனால் அந்நாடு சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்துள்ளது. வெளிநாட்டினர் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டில் அடுத்த மாதம் 12ஆம் தேதி திட்டமிட்டபடி மிஸ் யூனிவர்ஸ் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொள்ள வரும் போட்டியாளர்கள் அனைவரும் ஏலாத் நகரில் உள்ள ‘ரெட் ஸீ’ ரெசார்டில் தங்க வைக்கப்படுவர். 48 மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எப்படியும் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள், பட்டத்தை வெல்ல வேண்டும் என இலக்குடன் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

