கரூரில் வருகிறது ஐ.டி. பார்க்… அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி!!
கரூரில் வருகிறது ஐ.டி. பார்க்… அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி!!

கரூர் மாவட்டத்தில் ஐ.டி பார்க் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறையினருக்கான வேலைவாய்ப்பு முகாம் திருக்காம் புலியூர் பகுதியில் அமைந்துள்ளன தனியார் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமை துவக்கிவைத்து மாணவ மாணவிகளுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கினார். மேலும், 50 பேருக்குப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் புதிய ஐ.டி பார்க் அமைப்பதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார். இதன் மூலமாகக் கரூர் மாவட்ட இளைஞர்கள் சொந்த மாவட்டத்திலேயே ஐ.டி துறையில் பணிபுரியும் வாய்ப்பை முதலமைச்சர் கட்டாயம் ஏற்படுத்திக் கொடுப்பார் என தெரிவித்துள்ளார்.
ஜவுளி நகரமான கரூரில் 10 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் அதை 25 ஆயிரம் கோடியாக உயர்த்தும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 200 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் பூங்கா அமைப்பதற்கான ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் 'மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை' ஜெயராம் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி - கரூரில் இன்று காலை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினேன்.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 19, 2021
இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறையைச் (1/3) pic.twitter.com/0qQOyFE4TN
Made in china, Made in india என் கூறுவதைப்போல் Made in Tamilnadu என்று கூறுவதற்கான முயற்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதேபோல் Made in Karur என்று உலகம் முழுவதும் பேசும் அளவுக்கு நாம் செயல்பட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
newstm.in

