இனி சிலிண்டர் வாங்குவது கஷ்டமான காரியம்!!
இனி சிலிண்டர் வாங்குவது கஷ்டமான காரியம்!!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பை பெறும் போது பணம் செலுத்தும் முறையை மத்திய அரசு மாற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் ஒரு கோடி புதிய இணைப்புகளை வழங்குவதாக அறிவித்தார். ஆனால் இப்போது சிலிண்டர் மானியத்தில் மாற்றம் வரவிருக்கிறது.
முதலில் சிலிண்டர் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்த வேண்டும். புதிய மாற்றத்துக்குப் பிறகு, முன்பணம் செலுத்தும் நிறுவனம் மொத்தமாக ரூ.1600 வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது எண்ணெய் விநியோக நிறுவனங்கள் முன்பணத்தை EMI வடிவில் வசூலிக்கின்றன. ஆனால் இனி அப்படி இருக்காது. இந்தப் பணத்தை பொதுமக்கள் மொத்தமாக செலுத்த வேண்டியிருக்கும்.
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது. இதன் விலை சுமார் 3200 ரூபாய். இதற்கு அரசாங்கத்திடம் இருந்து 1600 ரூபாய் மானியம் கிடைக்கிறது.
அதே சமயம் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் முன்பணமாக 1600 ரூபாய் கொடுக்கிறது. இருப்பினும், இந்த மானியத் தொகையை மீண்டும் நிரப்பும்போது EMI ஆக வசூலிக்கின்றன.

இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு, நீங்கள் முதலில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள LPG விநியோகஸ்தரிடம் கொடுக்க வேண்டும். இந்த படிவத்தில், விண்ணப்பித்த பெண் தனது முழு முகவரி, ஜன் தன் வங்கி கணக்கு மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணையும் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.
newstm.in

