Theme Check

இனி ரேஷன் கடைகளில் இது கிடையாது! அதிரடி உத்தரவு!!

இனி ரேஷன் கடைகளில் இது கிடையாது! அதிரடி உத்தரவு!!

இனி ரேஷன் கடைகளில் இது கிடையாது! அதிரடி உத்தரவு!!
X

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் முறை பின்பற்றப்படுகிறது. இதில் ஏராளமானோருக்கு கைரேகை பதிவாகாததால் பொருட்கள் வழங்க முடியாது என திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

குறிப்பாக முதியோர் ஆதாரில் கைரேகை பதிவு செய்ய சேவை மையங்களூக்கு படையெடுக்கின்றனர். சில சமயங்களில் அங்கும் கைரேகை பதிவாகாததால் உணவு பொருள் வழங்கல் அலுவலரிடம் மனு செய்து சான்றிதழ் பெற்று வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இவ்வாறு செல்லும்போது அலுவலர்களும் உடனடியாக சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் பலரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விருதுநகர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உள்ள நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு முறை மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ration card

இவ்வாறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும்போது சில நேரங்களில் மின்னணு விற்பனை இயந்திரந்தில் கைரேகை பதிவு செய்வதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விநியோகம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு முறை செயல்படுத்த இயலாத சூழலில் குடும்ப அட்டை குறியீட்டு எண்ணை மின்னணு விற்பனை இயந்திரத்தில் ஸ்கேன் செய்வது மற்றும் குடும்ப அட்டை எண்ணை விற்பனை இயந்திரத்தில் உள்ளீடு செய்து அதன்படி விநியோகம் தொடர்ந்து மேற்கொள்ளப்படலாம்.

ration card

மேலும் விற்பனை இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் விரல் ரேகை சரிபார்ப்பு முறையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படலாம் என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வழிமுறைகளை பின்பற்றி இனி வரும் நாட்களில் நியாய விலை கடைகளில் பொதுமக்கள் தங்குதடை இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அறிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it