Theme Check

மிகவும் வருத்தமாக உள்ளது.. வீடியோவில் வேதனையை வெளிப்படுத்திய நடராஜன் !!

மிகவும் வருத்தமாக உள்ளது.. வீடியோவில் வேதனையை வெளிப்படுத்திய நடராஜன் !!

மிகவும் வருத்தமாக உள்ளது.. வீடியோவில் வேதனையை வெளிப்படுத்திய நடராஜன் !!
X

அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருப்பதால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக யாக்கர் மன்னன் நடராஜன் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிறப்பான பந்துவீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன், ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் அவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்று அங்கும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் புகழ் மேலும் உயர்ந்தது. தமிழகமே அவருக்கு வாழ்த்து கூறியது. இந்த சூழலில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கா விளையாடி வருகிறார். அவர் முதல் 2 போட்டிகளில் மட்டும் விளையாடிய நிலையில், அதன்பிறகு சன்ரைசர்ஸ் விளையாடிய ஆட்டங்களில் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் நடராஜன். இதுதொடர்பான விடியோவில் அவர் கூறியதாவது:- இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து முழுவதுமாக விலகுகிறேன். மிகவும் வருத்தமாக உள்ளது. கடந்த வருடம் நன்றாக விளையாடினேன். இந்த வருட ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் எதிர்பார்ப்புடன் இருந்தேன்.

முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. என்ன சொல்வதென்று தெரியவில்லை. மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது. இனிவரும் எல்லா ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் அணி வெல்லவேண்டும் என வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.newstm.in

Tags:
Next Story
Share it