#BREAKING:- பிரபல நடிகை வீட்டில் ஐ.டி ரெய்டு !!
#BREAKING:- பிரபல நடிகை வீட்டில் ஐ.டி ரெய்டு !!

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் கஷ்யப் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு ஃபாந்தம் பில்ம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பாளர்கள் மது வர்மா, விகாஸ் பாஹல் ஆகியோருடன் சேர்ந்து இயக்குநர் அனுராக் கஷ்யப் தொடங்கினார். நிதிச்சுமை அதிகரித்ததால் இந்த நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டுவிட்டது.
நிறுவனம் மூடப்பட்டுவிட்டாலும் இயக்குநர் அனுராக் மற்றும் தயாரிப்பாளர்கள் மது வர்மா, விகாஸ் பாஹல் ஆகியோர் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்று புகார்கள் இருந்து வந்தன. இதுதொடர்பாக, விசாரணை நடத்துவதற்கு வருமான வரித்துறை ஆணையம் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது.
அதன் காரணமாக நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் கஷ்யப், தயாரிப்பாளர்கள் மது வர்மா, விகாஸ் பாஹல் ஆகியோரது வீடுகள் மற்றும் மும்ப அலுவலகங்கள் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் கிடைக்கும் ஆவணங்களை வைத்து அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொள்ள வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஃபாந்தம் பிலிம்ஸ் மீது பல்வேறு குற்றச்சாடுகள் இருந்து வந்தன. பாலிவுட் சினிமா உலகைச் சேர்ந்த பலரும் இந்நிறுவனம் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது பாலிவுட் பிரபலங்கள் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை இந்தி சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

