Theme Check

“என் தந்தை தான் என்னை வற்புறுத்தினார்” : தனுஷ் ஓபன் டாக்!!

“என் தந்தை தான் என்னை வற்புறுத்தினார்” : தனுஷ் ஓபன் டாக்!!

“என் தந்தை தான் என்னை வற்புறுத்தினார்” : தனுஷ் ஓபன் டாக்!!
X

17 வயதில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் தனுஷ் இன்று உலக அளவில் மிக முக்கியமான ஹீரோ.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் ஆகிய படங்கள் இவரை சிறந்த நடிகராக ரசிகர்களுக்கு காட்ட , திருடா திருடி படம் இவருக்கு கமர்ஷியல் ஹீரோ என்ற அங்கீகாரத்தை கொடுத்தது. பின்பு வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்த தனுஷ் தன் திரைவாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு சென்றார்.

பொல்லாதவன், ஆடுகளம் , அசுரன், வடசென்னை ஆகிய படங்கள் இவரின் நடிப்பு திறமைக்கு சரியான தீனியாக அமைந்தது. குறிப்பாக ஆடுகளம் மற்றும் அசுரன் படத்திற்காக இரண்டு முறை தேசிய விருதை பெற்றார்.

dhanush

ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ்THE EXTRADINARY JOURNEY OF FAKIR என்ற படத்தின் மூலம் ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தார். நடிகர் மட்டுமல்லாது பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவர்.

தனுஷ் தன் ஆரம்பகால திரைவாழ்க்கையில் நிறைய விமர்சனங்களை சந்தித்தார். இந்நிலையில் இவர் சினிமாவிற்கு வந்தது எப்படி என பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. அதில் தான் நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்ததாகவும், தன் அப்பாதான் தன்னை ஒரு நடிகனாக்க ஆசைப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

dhanush

என் உடல் வாகிற்கு நடிப்பு சுத்தமாக செட் ஆகாது என்று சொன்னேன். ஆனால் எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்பதை கண்டுபிடித்து தனது அப்பா நடிக்கவைத்தார் என கூறியுள்ளார். இதனால் இயக்குநர் கஸ்தூரி ராஜாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it