வலியே இருக்காது.. தற்கொலை செய்துக்கொள்ள நவீன இயந்திரத்துக்கு ஒப்புதல் கொடுத்த அரசு !

வலியே இருக்காது.. தற்கொலை செய்துக்கொள்ள நவீன இயந்திரத்துக்கு ஒப்புதல் கொடுத்த அரசு !

வலியே இருக்காது.. தற்கொலை செய்துக்கொள்ள நவீன இயந்திரத்துக்கு ஒப்புதல் கொடுத்த அரசு !
X

வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கு என கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபலமான கருணைக் கொலை ஆர்வலரான டாக்டர் பிலிப் நிட்ச்கே, சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை இயந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் இந்த 3டி பிரிண்டட் இயந்திரத்தை எக்சிட் இன்டர்நேஷனல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

suicide machine

சவப்பெட்டி போன்ற இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று படுத்து கொள்ள வேண்டுமாம். அப்போது அவர்களிடம் அந்த இயந்திரம் தானியங்கி மூலம் கேட்கும் இரு கேள்விகளுக்கு பதிலளித்த பிறகு, அதிலிருக்கும் பட்டனை தானே அழுத்த வேண்டுமாம். அவ்வளவு தான் சில நொடிகளில் வலியே இல்லாமல் உயிர் பிரிந்துவிடும்.

அதாவது, பட்டனை அழுத்தியதும் இயந்திரமானது உட்புறத்தில் நைட்ரஜனை நிரப்புகிறது, ஆக்ஸிஜன் அளவை 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கிறது. உள்ளிருப்பவர் சுயநினைவை இழந்து ஆழ்ந்த கோமாவுக்கு சென்று விடுவர். இதெல்லாம் 30 வினாடிகளில் நடந்தேற அடுத்த 5 நிமிடத்தில் உயிர் பிரிந்து விடுகிறது.

suicide machine

எந்தவித வலியும் இல்லாமல், ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறை மூலம் இறப்பை நிகழ்த்துகிறது. இந்த இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியுள்ளது. அடுத்தாண்டு முதல் இந்த இயந்திரம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. ஆனால் இந்த தற்கொலை இயந்திரத்துக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it