தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யும்!!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யும்!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது எனவும் கணித்துள்ளது.

சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். என்றும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் போரூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
newstm.in

