Theme Check

விவசாயிகளுக்கு ஒரு ஆண்டு ஆனதே.. உங்களால் 15 நிமிடம் முடியவில்லையா? - பிரதமருக்கு சித்து கேள்வி

விவசாயிகளுக்கு ஒரு ஆண்டு ஆனதே.. உங்களால் 15 நிமிடம் முடியவில்லையா? - பிரதமருக்கு சித்து கேள்வி

விவசாயிகளுக்கு ஒரு ஆண்டு ஆனதே.. உங்களால் 15 நிமிடம் முடியவில்லையா? - பிரதமருக்கு சித்து கேள்வி
X

பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று முன்தினம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக சென்றார். அப்போது வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்ததால் பிரதமரின் வாகனம் அப்பகுதியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் கார் 15 நிமிடத்துக்கு மேல் நிறுத்தப்பட்டது.

modi car punjab

பின்னர் போக்குவரத்தை சரிசெய்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டதாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இந்த சம்பவத்திற்கு காரணம் என பஞ்சாப் அரசு தான் என்றும், முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செய்யவில்லை என்றும், காங்கிரஸையும் பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு பஞ்சாப் முதலமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், பஞ்சாப் காங்கிரசின் முக்கிய தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, பிரதமர் பயண திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி அவர்களே, உங்களால் 15 நிமிடம் காத்திருக்க முடியவில்லையா? வேளாண் சட்டத்தை விலக்கக் கோரி விவசாயிகள் ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தினார்களே, அப்போது எங்கு சென்றீர்கள்? ஏன் இந்த இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறீர்கள் என ஆவேசமாக தெரிவித்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it