வரும் ஏப்ரல் 1 முதல் கார்களில் இது கட்டாயம்! மத்திய அரசு!
வரும் ஏப்ரல் 1 முதல் கார்களில் இது கட்டாயம்! மத்திய அரசு!

டோல்கேட்களில் காத்திருப்பை தவிர்க்க இந்தியா முழுவதும் பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக கார்களில், உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிதாக வடிவமைக்கும் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கார்களில் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள், ஏர்-பேக் ஐ பொருத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த திடீர் உத்தரவால் கார்கள் விலை சற்று உயரலாம் எனவும் ஏற்கனவே 2019 ஜூலையில் ஓட்டுநர் இருக்கைகளில் ஏர் பேக் கட்டாயம் என அறிவித்திருந்த நிலையில் மத்திய அரசு தற்போது, முன் பக்கம் உள்ள இரு இருக்கைகளிலும் ஏர் பேக் கட்டாயம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Next Story

