ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியிலிருந்து விலகுகிறார் ஜாக் டோர்சி!

ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியிலிருந்து விலகுகிறார் ஜாக் டோர்சி!

ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியிலிருந்து விலகுகிறார் ஜாக் டோர்சி!
X

பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து ஜாக் டோர்சி விலகுகிறார். தான் விலகுவதற்கான சரியான நேரம் இது என முடிவு செய்துள்ளதாக ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சி அறிவித்துள்ளார்.மேலும் எனக்கு இது கடினமான முடிவும் எனவும் இந்த நிறுவனம், வேலை மற்றும் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன் என பணியாளர்களுக்கு ஜாக் டோர்சே மின்னஞ்சல் மூலம் உருக்கமாக தகவலை அனுப்பி உள்ளார்.

ஜாக் டோர்சி, ட்விட்டரின் துணைத்தலைவர் சிஇஓ தலைவர் நிர்வாக தலைவர் என 16 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.ஜாக் டோர்சி விலகுவதை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஆக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:
Next Story
Share it