Theme Check

ஜாக்பாட் அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும்!!

ஜாக்பாட் அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும்!!

ஜாக்பாட் அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும்!!
X

புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில் சென்ற ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

அதன்படி, 28 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Office

மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக தங்களது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான மற்றொரு அறிவிப்பு வெளியானது.

அதாவது 28 சதவீத அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்வுடன் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ரூ.5,580 ஆக உயர்ந்தது.

Office

அகவிலைப்படி உயர்த்தப்பட்டாலும் முந்தைய மாதங்களுக்கான நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் புத்தாண்டில் அகவிலைப்படி நிலுவைத் தொகை முழுவதும் ஒரே அடியாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையில் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it