அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிப்பு..!
அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிப்பு..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட நாள் காத்திருப்பிற்கு பயனாக அகவிலைப்படி (டிஏ) உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி நிவாரணமான 3 % உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு டிஏ மற்றும் டிஆர் அதிகரிப்பு மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வர் சோரன் தலைமையிலான அரசு கடந்த புதன்கிழமை ஊழியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தற்போது மத்திய அரசின் வழியில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 31 சதவீதத்திற்கு பதில் 34 % அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும், பின்னர் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 31-ல் இருந்து 34 சதவீதமாக உயரும். இதன் மூலம் மாநில அரசுக்கு 400 கோடி ரூபாய் கூடுதல் செலவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களும் இந்த அதிகரிப்பின் பலனை அடைவார்கள். இதனிடையில், 7-வது ஊதியக்குழுவின் கீழ் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான தொகை மே மாதத்தில் வழங்கப்படும்.
இதனுடன், அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள நிலுவை தொகையும் வழங்கப்படும். இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் 17 பரிந்துரைகளுக்கு ஜார்கண்ட் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அத்துடன், இதில் ஆசிரியர்களின் மாவட்ட மாறுதல் உள்ளிட்ட திருத்தப்பட்ட இடமாறுதல் விதிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம், மத்திய ஊழியர்களுக்கு இணையான டிஏ மாநில ஊழியர்களுக்கும் கிடைக்கும். முன்பு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், அவர்களுக்கு 3 % உயர்வுடன் அவர்களின் டிஏ 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இதற்கு முன்பு மாநில அரசு ஊழியர்களுக்கு 31 % அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் அதே ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படியும் அதிகரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

