ஏடிஎம்-இல் பணம் எடுக்கும்போது இந்த தவறை செய்தால் சிறை!!
ஏடிஎம்-இல் பணம் எடுக்கும்போது இந்த தவறை செய்தால் சிறை!!

ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. ஆனால் அது பலருக்கும் தெரிவதில்லை.
ஒருவர் இறந்த பிறகு அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது சட்ட விரோதமானது. ஒருவரின் மரணத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தெரிவிக்காமல் இறந்தவரின் நாமினியால் கூட பணத்தை எடுக்க முடியாது.
அப்படி யாராவது பணத்தை எடுத்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படலாம். அந்த நபரின் மரணத்திற்குப் பிறகு அதிலுள்ள பணம் வேறு ஒருவரின் (நாமினி) பெயரில் மாற்றப்படும் வரை அந்தப் பணத்தை எதுவும் செய்ய முடியாது.
கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டார் என்பதை முதலில் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு இறந்தவரின் நாமினி முழு செயல்முறையையும் முடித்த பிறகே பணத்தை எடுக்க முடியும்.

ஒருவேளை இறந்தவரின் கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகள் இருந்தால், அனைத்து நாமினிகளும் வங்கியில் விண்ணப்பித்து பணத்தை எடுக்கலாம். இறந்தவரின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை அவரது நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று கோரலாம். இதற்காக அவர் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.
அதனுடன், இறந்தவரின் பாஸ்புக், ஏடிஎம், காசோலை புத்தகம், இறந்தவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் அவரது ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற முக்கியமான ஆவணங்களும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகே இறந்தவரின் பணம் நாமினிக்கு மாற்றப்பட்டு அந்தக் கணக்கு மூடப்படும்.
newstm.in

