ஈபிஎஸ்க்கு விரைவில் புழல் ஜெயில்! மகிளா காங்கிரஸ் தலைவர் அதிரடி!!
ஈபிஎஸ்க்கு விரைவில் புழல் ஜெயில்! மகிளா காங்கிரஸ் தலைவர் அதிரடி!!

திருப்பூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், அதிகமான ஊழலை செய்த மிகப்பெரிய பெருச்சாளியாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். நீங்கள் செய்த தவறுகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்று அதிரடி காட்டினார்.
மக்களுக்காக தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் நீங்கள் கிடையாது. ஆனால் தமிழக மக்களின் மனங்களை வென்று, வாக்குகளை பெற்று சட்டமன்றத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலின் மீதிருக்கும் வயிற்றெரிச்சல் காரணமாக, சட்டமன்றத்தை முடக்குவோம் என்றெல்லாம் கூறி எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார்.

உங்களின் ஊழல்கள் படிப்படியாக மக்களுக்கு தெரியத் தொடங்கிவிட்டது. உங்கள் வீட்டை முற்றுகையிடப் போகிறார்கள். நீங்கள் சட்டமன்றத்தை முடக்க முடியாது. புழல் சிறையில் போய் தான் முடங்கிக் கிடக்க போகிறீர்கள் என்றார்.
மேலும், ஆட்டுக்குட்டி அண்ணாமலை அண்ணன் எதையாவது பேசி மீடியாவில் வர வேண்டும் என்று நினைக்கிறார். பயங்கரமாக சவால் விடுகிறார்.கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை தமிழக மக்கள் பரிசளித்தார்கள். அப்புறம் எதற்கு வீண் வம்பு என்று கேள்வி எழுப்பினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்கள் கிடைக்காமல் டிஜிபி அலுவலகம், கமிஷனர் அலுவலகம், ஜெயில் ஆகியவற்றில் இருந்து ஆட்களை கொண்டு வந்து வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் பதவியை விட்டு விலகிச் செல்வது தான் நல்லது என்று கேட்டுக் கொண்டார்.
newstm.in

